தினேஷ் கார்த்திக் ஓய்வு - அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினேஷ் கார்த்திக்-க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு செய்தியை படித்தறிந்தேன். அவர் மிகவும் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் விளையாடிய அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.