“நம்மைப் பற்றியே பேச்சு!” - சன்ரைசர்ஸ் அணி ட்ரெஸ்ஸிங் ரூமில் காவ்யா மாறன் பெருமிதம்
சென்னை: “டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றிவிட்டீர்கள். கேகேஆர் வெற்றி பெற்றாலும், அனைவரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களுக்கு அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஹைதராபாத் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கைதட்டியபடியே, மைதானத்தில் கண்ணீருடன் வலம் வந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த வீடியோ வைரலானது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


