IPL 2024 Prize Money: ஹைதராபாத்துக்கு ரூ.13 கோடி; கொல்கத்தாவுக்கு எவ்வளவு? ஐ.பி.எல் பரிசுத் தொகைகள்!
ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டிக்குப் பிறகும் பரிசளிப்பு விழா நடைபெறும். அதில் வீரர்களுக்கு விருதுகளும், பரிசுத்தொகைகளும் வழங்கப்படும். அந்தவகையில் இந்தாண்டுக்கான விருதுகள் மற்றும், பரிசுத்தொகைகள் குறித்துப் பார்ப்போம்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி விராட்கோலிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பியை ஹர்சல் பட்டேல் கைப்பற்றினார். அவருக்கும் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
அதேபோன்று வளர்ந்து வரும் வீரருக்கான விருதை சன்ரைசர்ஸ் அணியின் நிதிஷ்குமார் ரெட்டி பெற்றிருக்கிறார். அவருக்கு 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மிகுந்த மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை கேகேஆர் அணியின் சுனில் நரைன் பெற்றிருக்கிறார்.
அவருக்கு 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ‘Fair play’ விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இறுதிப்போட்டி வரை வந்த சன்ரைசர்ஸ் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 3வது இடத்தைப் பிடித்து வெளியேறிய ராஜஸ்தான் அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மறுபுறம் எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 6.5 கோடி பரிசுத்தொகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


