RCB: “விராட் கோலி RCB அணியை விட்டு இந்த அணிக்குச் செல்ல வேண்டும் - கெவின் பீட்டர்சன்

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 741 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி அணிக்காக அதிரடியாக விளையாடியிருக்கிறார் விராட் கோலி.

அதுமட்டுமின்றி ஆரஞ்சு கேப்புடன் ஐபிஎல்-வரலாற்றில் 8000 ரன்களைக் கடந்து அதிக ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தகாரராகியுள்ளார். இருப்பினும், அவரது ஆர்சிபி அணி சிஎஸ்கே-வை வீழ்த்தி ப்ளேஆஃபிற்குத் தகுதிபெற்ற போதிலும், எலிமினேட்டர் மேட்சில் ராஜஸ்தானை வெல்ல முடியாமல் வெளியேறியது.

கெவின் பீட்டர்சன், விராட் கோலி

கடந்த அனைத்து ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணி ஏதோவொரு காரணங்களால் பின்னடைவைத்தான் சந்தித்து வருகிறது. ஆனால், விராட் கோலி ஒவ்வொரு போட்டிலும் சிறப்பாகத் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார். 

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனான கெவின் பீட்டர்சன், “விராட் கோலி ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணிக்காகச் சிறப்பாக விளையாடுகிறார். அந்த அணிக்காக 2வது முறையாக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். இருப்பினும், அணியாக அவர்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்த வண்ணமிருக்கின்றனர்.

கெவின் பீட்டர்சன், விராட் கோலி

விராட் ஐபிஎல் கோப்பையை வெல்லத் தகுதியானவர். எனவே அவர் RCB அணியை விடுத்து வேறு அணிக்குச் சென்றால் நன்றாக இருக்கும். டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி டெல்லிக்காக விளையாடினால் அது அவருக்குப் பொருத்தமாக இருக்கும். டெல்லியில் அவருக்கு வீடு இருப்பதால் குடும்பத்துடனும் தனது நேரத்தை செலவிடவும் விராட் கோலிக்கு வசதியாக இருக்கும்” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.