DK: நான் கஷ்டப்பட்டப்போ தினேஷ் கார்த்திக் நிறைய உதவியிருக்காரு! - நெகிழ்ந்த விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது. பெங்களூரு அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்தவுடனேயே இரு அணி வீரர்களுமே தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தினேஷ் கார்த்திக்கும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி, தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக்கிற்காக வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் குறித்துப் பேசியிருக்கும் விராட் கோலி, “தினேஷ் கார்த்திக் மிகவும் புத்திசாலியான நபர். கிரிக்கெட் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவு அவரிடம் இருக்கிறது. அவருடனான எனது உரையாடல்களை நான் ரசிப்பேன். 2022, எனக்கு கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான ஆண்டாக இல்லாதபோது நான் தொடர்ந்து போராடினேன்.

அப்போது என்னுடன் அமர்ந்து அவரது தரப்பிலிருந்து மிகவும் நேர்மையான அறிவுரைகளை எனக்கு அளித்தார். எல்லோரிடமும் பேசும் அவரது தைரியமும் நேர்மையும் எனக்குப் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகல், “அவர் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் அணியிலிருந்து நீக்கப்படுவார்.

தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி தீபிகா பல்லிகல்

அப்போது இரண்டு, மூன்று நாள்களுக்கு மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு என்ன செய்யலாம் என்று மீண்டும் தனது வேலையைத் தொடங்கி விடுவார். அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயமாக கிரிக்கெட்டிலிருந்து எப்போதோ விலகியிருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.