ICC: “விராட் கோலியை வெளியேற்ற பார்க்கிறார்கள்; அவர் இதைச் செய்தாக வேண்டும் - ரிக்கி பாண்டிங்

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் 14போட்டிகளில் 708 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி அணிக்காக அதிரடியாக விளையாடி வருகிறார் விராட் கோலி.

சிஎஸ்கே-வை வீழ்த்தி ப்ளேஆஃபிற்குத் தகுதிபெற்ற ஆர்சிபி அணி, இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது. இப்போட்டியில் தோற்றால் ஆர்சிபி வெளியேறிவிடும். விராட் கோலிக்கும் இது முக்கியமான போட்டி. இப்போட்டில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்-வரலாற்றில் 8000 ரன்கள் என அதிக ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தகாரராவார்.

விராட் கோலி, ரிக்கி பாண்டிங்

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இப்படி சாதனைகள் படைத்துவரும் கோலி, ஐபிஎல் தொடரை முடித்தக் கையோடு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக விளையாடவிருக்கிறார். இந்நிலையில்  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், வீராட் கோலியின் பேட்டிங் குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசியுள்ளார். அதில், “இந்திய அணியில் விராட் கோலியைத் தேர்வு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணிக்காக என்னுடைய தேர்வுப் பட்டியலில் விராட் கோலிக்குதான் முதலிடம். இதை நான் ஐசிசி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் உரையாடலின் போது கூட தெரிவித்திருந்தேன். சர்வதேச போட்டிகள் என்று வரும்போது அவரைப் போன்ற அனுபவமும் தரமும் கொண்ட ஒரு வீரர் அவசியம் தேவை. 

விராட் கோலி, ரிக்கி பாண்டிங்

இந்த டி 20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங்கில் முதலில் களமிறங்குபவர்கள் 80 - 100 ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம். அதுவே அணிக்கு பலம் சேர்க்கும் நல்ல யுக்தியாக இருக்கும். 15 பந்துகளில் 40 ரன்கள், 55 பந்துகளில் 80 என நல்ல ரன்ரேட்டில் விளையாட வேண்டும். பேட்டிங்கில் களமிறங்க தற்பொழுது ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, விராட் கோலியின் ரோஹித் சர்மாவும் துவக்க வீரராக களமிறங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அணிக்காக தொடக்கத்தில் இறங்கி நல்ல ரன்களைக் குவிப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.