சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை என நேற்றைய ஐபிஎல் போட்டி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 

தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்!

 

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி‌ தோனி!

 

முன்னதாக நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்றும் இதனை அடுத்து பெங்களூரில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Edited by Siva

 

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.