ஐபிஎல் | மழையால் ஹைதராபாத் -  குஜராத் ஆட்டம் ரத்து: பிளே ஆஃப் சுற்றில் யாருக்கு பயன், பாதிப்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (மே 16) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக டாஸ் போடாமல் கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் நடப்பு தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

மழையால் ஹைதராபாத்தில் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் இருந்த கொஞ்ச வாய்ப்பும் பறிபோனது. இதனால் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது உறுதியானது. இரண்டாவது, புள்ளிபட்டியலில் சன்ரைசர்ஸ் இரண்டாமித்தை பிடிப்பது தற்போது ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டத்தை பொறுத்தே அமையும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றிபெற்று, ஞாயிற்றுகிழமை பஞ்சாப்பை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் அதில் வெற்றிபெற்றால் சன்ரைசர்ஸ் இரண்டாமிடம் பிடிக்கும். மாறாக ராஜஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணியே இரண்டாமிடம் பிடிக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.