IPL 2024: 2வது இடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?? இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 15) பர்சபரா மைதானத்தில் 65 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ராஜஸ்தான் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க என்னதான் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், 2வது இடத்தை தக்கவைக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி மிக அவசியம். ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்த அணி 3வது இடத்திற்கு தள்ளப்படலாம். இந்த இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதியுள்ள நிலையில், அதில் ராஜஸ்தான் அணி 16 முறையும் பஞ்சாப் 11 முறையும் வென்றுள்ளன. அதனால் இந்த முறை ராஜஸ்தான் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்களே., விடைத்தாள் நகல் & மறுகூட்டலுக்கான விண்ணப்பம்? முழு விவரம் உள்ளே…
The post IPL 2024: 2வது இடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?? இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


