IPL 2024: பிளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது? வெளியான அப்டேட்!
ஐ.பி.எல் தொடரின் பிளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.
ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகளுக்கும் பிளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மற்றும் நிர்வாக விஷயங்களை அந்தந்த அணிகள்தான் கவனித்துக் கொள்ளும். உதாரணமாக சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்தான் பார்த்து கொள்கிறது. அவர்கள் ஸ்பான்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் கொடுத்த முடித்த பிறகு மீதமிருக்கும் டிக்கெட்டுகளைத்தான் ரசிகர்களுக்காக விற்பனை செய்வார்கள். எல்லா மைதானங்களிலும் அதன் சொந்த அணிகள் இப்படித்தான் செய்யும்.
ஆனால், பிளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியில் இந்த முறை கிடையாது. இந்தப் போட்டிகளுக்கான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பிசிசிஐயின் கீழ் வந்துவிடும். டிக்கெட் விற்பனையை பிசிசிஐதான் நடத்தும். அதனால் லீக் போட்டிகளை விட இந்தப் போட்டிகளுக்கு அதிகப்படியான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு விற்பனைக்கு வரும்.
பிளேஆஃப்ஸ் போட்டிகள் மே 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல் தகுதிச்சுற்றுப் போட்டியும் எலிமினேட்டர் போட்டியும் 21, 22 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் நடக்கிறது. தகுதிச்சுற்று - 2 மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை மே 24, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.
இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை பற்றிய அப்டேட் இப்போது வெளியாகியிருக்கிறது. இறுதிப்போட்டி தவிர்த்து மற்ற மூன்று போட்டிகளுக்குமான டிக்கெட் விற்பனை இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று Rupay கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேக விற்பனை நடக்கிறது. மே 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடக்கிறது. Rupay கார்டு வைத்திருப்பவர்கள் 20-ம் தேதியும் அனைவருக்குமான டிக்கெட் விற்பனை 21-ம் தேதியும் தொடங்குகிறது. Paytm தான் ஐ.பி.எல்-இன் அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதில்தான் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இது முதல்கட்ட டிக்கெட் விற்பனை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியை தவிர்த்து மற்ற 3 போட்டிகளுக்கும் Rupay கார்டு வைத்திருப்பவர்களுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


