RCB vs DC: ``எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம் - கேப்டன் டு பிளெஸ்ஸி!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து கேப்டன் டு பிளெஸ்ஸி பேசியிருக்கிறார். நேற்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த சீசனின் முதல் பாதியில், வெற்றிக்காக நாங்கள் போராடினோம்.

RCB

முதல் ஐந்து அல்லது ஆறு ஆட்டங்களில், எங்களால் சரியான விக்கெட்டுகளைப் பெற முடியவில்லை. தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் சரியாகச் செய்கிறோம். ஸ்வப்னில் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். போட்டிக்கு முன் நாங்கள் போட்ட திட்டங்கள் எங்களுக்கு கை கொடுத்திருக்கிறது. எங்களுக்கு பந்து வீச்சில் நிறைய வெரைட்டிகள் வந்திருக்கிறது. கடந்த சில போட்டிகளில் தயால் மற்றும் லாக்கி பெர்குசன் இருவரும் விதிவிலக்காக இருந்தார்கள்.

நாங்கள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பாணியில் விளையாட விரும்புகிறோம். தைரியமாக இருக்க வேண்டும், சிலவற்றை தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

RCB

இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.