“இனி விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன்”.. உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!!
இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக வரும் ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கு பிறகு இங்கிலாந்து ஆடவர் அணியானது தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதிர போகும் மதுரை.. த.வெ.கவின் முதல் மாநாடு எப்போது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
இந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு குறித்த முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே தனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக இனி விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post “இனி விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன்”.. உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


