IPL 2024: பவர் ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோர்.. சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓர் சாதனையை படைத்துள்ளது.

அதாவது ஹைதராபாத் அணி இப்போட்டியின் பவர் ப்ளே ஓவர்களில் 107 ரன்களை குவித்தது. இதன் மூலம் IPL வரலாற்றிலேயே பவர் ப்ளேயில் 2 முறை 100 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை படைத்தது. முன்னதாக டெல்லி அணிக்கு எதிராக 125 ரன்கள் அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024: பவர் ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோர்.. சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.