Sanju Samson: வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாம்சன்; 30% அபராதம் விதித்த பிசிசிஐ - நடந்தது என்ன?
நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். குறிப்பாக முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தில் அவர் அடித்த சிக்ஸரை ஷாய் ஹோப் பவுண்டரி எல்லையில் நின்று பிடித்தார்.
அப்போது அவருடைய கால்கள் பவுண்டரி எல்லையில் பட்டது போலத் தெரிந்தால் நடுவரிடம் சஞ்சு சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 1 நிமிடம் கூட முழுமையாகச் சோதிக்காமல் 3வது நடுவர் அவுட் கொடுத்தார்.
"இது அவுட் இல்லை என முறையிட்டார். மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா?" எனக் கேட்டார் சஞ்சு சாம்சன். அப்போது போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் எழுந்து நின்று, "இது அவுட்டுதான் வெளியே போ... அவுட்தான் அவுட்தான்" எனக் கத்தினார்.
சஞ்சு சாம்சன் ஏமாற்றத்துடன் சென்றார். சஞ்சு சாம்சனுக்குத் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததாகப் பலரும் கூறி வருகின்றனர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நடுவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்து கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே அவுட் கொடுத்தது குறித்து களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐ.பி.எல் நடத்தை விதிகளை மீறியதாக சஞ்சு சாம்சனுக்குப் போட்டியின் ஊதியத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் குறித்தும், இந்த அபராத முடிவு குறித்தும் உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


