படுதோல்வி அடைந்த லக்னோ.. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மாற்றம்..!


நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சுனில் நரேனின் அபார பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 236 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியின் 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதனை அடுத்து கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இதுவரை புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் இருந்த நிலையில் கொல்கத்தா அணி 16 புள்ளிகள் உடன் நல்ல ரன் ரேட்டையும் பெற்றுள்ளதால் அந்த அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான், சிஎஸ்கே, ஹைதராபாத் ஆகிய அணியில் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.