IPL 2024: லக்னோவுக்கு எதிரான போட்டி.., ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!!
2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் மும்பை அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது. அதாவது லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பது இது 2வது முறை. இதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு போட்டியில் மெதுவாக பந்து வீசினால், 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் பாண்டியா விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC 2024 பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம்!!என்னென்ன படிக்கலாம் !!! இந்த வீடியோ பாருங்க !!
The post IPL 2024: லக்னோவுக்கு எதிரான போட்டி.., ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


