T20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!!
2024 T20 உலக கோப்பைத் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்டது. அந்த வெளியான அறிவிப்பில் இத்தொடர் வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளது நாம் அறிந்ததே. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 29 ஆம் தேதி அரங்கேற உள்ளது. இத்தொடர் மொத்தமாக 55 T20 போட்டிகளை கொண்டுள்ளது. இதில் அனைத்து போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகின்றன.
TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50 வினாக்கள் | 50 MCQ’s Important General Tamil Questions
இந்த நிலையில் இத்தொடருக்காக அணிகளை தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகள் அறிவித்த நிலையில் தற்போது இந்தியா 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் செயல்பட உள்ளனர். 2024 T20 உலக கோப்பைக்கான இந்திய அணியை கீழ் காணலாம்.
2024 T20 உலக கோப்பைக்கான இந்திய அணிகள்:
ரோஹித் (கேப்டன்), கோஹ்லி, ஜெய்ஸ்வால், சூர்யா, பந்த் (WK), சாம்சன் (WK), ஹர்திக் (துணை கேப்டன் ), துபே, ஜடேஜா, அக்சர், குல்தீப், சாஹல், அர்ஷ்தீப், பும்ரா மற்றும் சிராஜ்.
இருப்பு – கில், ரிங்கு, கலீல் மற்றும் அவேஷ்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post T20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


