9 வீரர்கள் நிச்சயம் எனும் போது டி20 உ.கோப்பையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அரிது!

இன்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழு கூடி டி20 உலகக் கோப்பைக்கான அணித்தேர்வு விவாதம் நடத்துகின்றனர். இதில் ரோஹித், கோலி, ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட்/சஞ்சு சாம்சன், குல்தீப், ரிங்கு சிங் என்று 9 வீரர்கள் நிச்சயம் தேர்வு என்னும் நிலையில் மீதி 6 வீரர்களுக்காக ஒரு தேர்வுக்குழு கூடுகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் பிரகாசிக்கும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு ஏறக்குறைய கிடையாது என்றே கூறலாம்.

ஸ்டாய்னிஸிடம் அவர் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலேயே இல்லையே என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘ஏன்? புது வீரர்கள், திறமையான புதுமுகங்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஆடட்டுமே’ என்றார். அத்தகைய பெருந்தன்மையை ரோஹித்திடமோ, வர்த்தகக் குறி கோலியிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது. டி20 என்பதே புதுமுக வீரர்களின் வரத்துக்களினால் ரசிகர்களிடையே பெற்ற உந்துதலால் பிரபலமடைந்தது, இதில் பழைய குதிரைகள் மீது பந்தயம் கட்டும் ஒரே வாரியம் பிசிசிஐ-யாகத்தான் இருக்க முடியும். காரணம் இங்கு செலக்‌ஷனில் ஸ்பான்சர்கள், வர்த்தகக் கூட்டாளிகளின் செல்வாக்கு அதிகம் உள்ளது என்று கூறப்படுவதே.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.