டெல்லி கேபிடல்ஸுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ்
புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த்தின் துணிச்சலான மட்டை வீச்சு மற்றும் எழுச்சியூட்டிய அவரது தலைமைப்பண்பு ஆகியவற்றால் டெல்லி கேபிடல்ஸ் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


