3.2 ஓவர்கள், 0 ரன், 7 விக்கெட்டுகள்: டி20-ல் இந்தோனேசிய வீராங்கனை தனித்துவ சாதனை!

பாலி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்துள்ளார் இந்தோனேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் 17 வயது வீராங்கனை ரோமாலியா. மங்கோலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 3.2 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான் அவர் படைத்துள்ள சாதனை.

பாலி பேஷ் சர்வதேச மகளிர் டி20 தொடரில் இந்தோனேசியா மற்றும் மங்கோலியா அணிகள் விளையாடின. இந்த தொடரின் 5-வது டி20 போட்டியில் இந்தோனேசியா அணியில் அறிமுக வீராங்கனையாக விளையாடினார் ரோமாலியா. இதில் டாஸ் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது அந்த அணி. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மங்கோலியா விரட்டியது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.