SRH vs RCB | தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி - ஹைதராபாத்தை 35 ரன்களில் வென்றது
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 51 ரன்கள், ரஜத் பட்டிதார் 50 ரன்கள், கேமரூன் கிரீன் 37 ரன்கள் மற்றும் டூப்ளசி 25 ரன்கள் எடுத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


