நோ-பால் கொடுக்காததற்கு விராட் கோலியின் கோபம் நியாயமா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவின் 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ஆர்சிபி தோற்றது. மிட்செல் ஸ்டார்க்கை கரன் சர்மா சிக்சர்களை விளாசுவது என்பதெல்லாம் ஐபிஎல் என்ற கிரிக்கெட் வகைக்கேயுரிய விசித்திரம் அல்லது நகை முரண். இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த பந்து இடுப்புயரத்திற்கு மேல் வந்தது என்று கோலி கோபாவேசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஹாக் ஐ கேமரா மிகச்சரியாகவே அதைப் படம் பிடித்திருந்தது.

கோலி 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 18 ரன்களை அடித்து இலக்கை நோக்கிய பயணத்தை அதிரடியாகவே தொடங்கி வைத்தார். ஆனால் அவர் எப்படியும் மிடில் ஓவர்களில் தொங்கி விடுவார் என்பது அவரது இன்னிங்ஸ்களை இதுவரை ஐபிஎல் தொடரில் பார்த்தவர்களுக்குப் புரியும் எனவே அவர் ஆட்டமிழந்தது ஒரு விதத்தில் மறைமுக ஆசீர்வாதமே. கோலி இப்படிப்பட்ட சிறு சிறு கேமியோக்களை ஆடுவது அணிக்குப் பயன் தரும் கடைசி வரை நின்று 71 பந்துகளில் 100 ரன்களை எடுப்பது அணியின் வெற்றிக்கு உதவாது என்பது பல முறை நிரூப்பிக்கப்பட்ட ஒன்று.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.