கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 11-வது சுற்றில் விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா தோல்வி
டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இந்த ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் விதித் குஜராத்தி 67-வது காய் நகர்த்தலின்போது அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


