தோல்வி அடைந்த போதிலும் கடைசி வரை போராடிய விதம் சிறப்பானது: ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்கள் குவித்த தனது சொந்த சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்தது. அந்த அணி இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்திருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


