T20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!

IPL  தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓர் சாதனையை படைத்துள்ளது.
அதாவது ஹைதராபாத் அணி இப்போட்டியில் 287 ரன்களை குவித்தது. இதன் மூலம் T20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 2வது அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற சாதனையை படைத்தது. இதில் 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி முதல் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2024-25 முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட NBEMS!!!

The post T20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.