‘எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் விளாசிய 3 சிக்ஸர் வெற்றிக்கு உதவியது’ - ருதுராஜ் வேடிக்கை பேச்சு
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தது.
“எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (தோனி) விளாசிய அந்த மூன்று சிக்ஸர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியது. இரண்டு இன்னிங்ஸுக்குமான வித்தியாசம் அதுதான். இந்த மாதிரியான ஆடுகளங்களில் கூடுதலாக எடுக்கப்படும் அந்த 10-15 ரன்கள் அணிக்கு தேவையானது” என தோனி குறித்து வேடிக்கையாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

