“டி20 உலகக் கோப்பை செலக்ஷனுக்கு ஆடுறியா, வெல்டன்” - தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த ரோஹித்
தினேஷ் கார்த்திக் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன்னிடம் உள்ள அனைத்து விசித்திரமான ஷாட்களை எல்லாம் ஆடி 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 53 ரன்களை விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்து ஆர்சிபி அணியின் ஸ்கோரை 196 ரன்களுக்கு உயர்த்தினார். அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக்கை மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நட்பு ரீதியாக கலாய்த்தது சமூக ஊடக தளத்தில் வைரலாகி வருகிறது.
ரோஹித் சர்மா தலைமையில்தான் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி செல்ல உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக்கை உலகக் கோப்பை டி20 செலக்‌ஷனுக்காக ஆடுகிறாயா என்று நட்பு ரீதியாக கலாய்த்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


