IPL 2024: CSK போராட்டம் வீண்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற SRH அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 165 ரன்கள் குவித்தது. அதிகபட்சமா சிவம் துபே45 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த ஐடன் மார்க்ராம் சிறப்பாக விளையாடி 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: CSK போராட்டம் வீண்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.