IPL 2024: குஜராத் போராட்டம் வீன்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி..!
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமா சுப்மன் கில் 89 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த ஷஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 200 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL 2024: குஜராத் போராட்டம் வீன்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி..! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


