டிஎன்பிஎல் டி20 தொடர் ஜூலை 5-ல் தொடக்கம்
சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டு சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி வரும் ஜூலை 5-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


