டி காக், பூரன் விளாசல்: ஆர்சிபி-க்கு 182 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
பெங்களூரு: ஐபிஎல் தொடரின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குயின்டன் டி காக் 5 சிக்சர்களை விளாசி 81 ரன்களை குவித்தார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோவின் ஓப்பனர்களாக குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் களமிறங்கினர். டி காக் ஒருபுறம் பந்துகளை பறக்கவிட, கிளென் மேக்ஸ்வெல் வீசிய 6ஆவது ஓவரில் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் விக்கெட்டானார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


