IPL 2024: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்…, மும்பை மீண்டும் தோல்வி!!
IPL தொடரின் 14 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வந்த வேகத்தில் 10 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தார். ஆனால், அடுத்த வந்த ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி, 15.3 ஓவரிலேயே 127 ரன்களை குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்…, மும்பை மீண்டும் தோல்வி!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


