ஒலிம்பிக் போட்டிக்கு மீராபாய் சானு தகுதி

புக்கெட்: தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகரில் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோஎடையை (81 103) தூக்கி 3-வது இடம் பிடித்தார்.

இதன் மூலம் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளார் மீராபாய் சானு. 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான மீராபாய் சானு, 49 கிலோ எடைப் பிரிவு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.