சொந்த மண்ணில் தோல்வி அடைந்த பெங்களூரு.. கொல்கத்தா அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையில் ஆன போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த நிலையில் சொந்த மண்ணில் பெங்களூரு மிக மோசமாக தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முதலிங் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து 183 என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது
கொல்கத்தா அணியின் சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அபாரமாக விளையாடிய காரணமாக 16.5 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இதனை அடுத்து கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


