பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு: நவம்பரில் ஆஸி. செல்கிறது இந்தியா
பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மொத்தம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 22-ல் பெர்த்தில் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக ஓவலில் நடக்கிறது. மற்ற மூன்று போட்டிகள் பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் முறையே டிச.14-ம் தேதி, டிச.26-ம் தேதி மற்றும் 2025 ஜன.3-ம் தேதி ஆகிய தினங்கள் நடக்கவுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


