WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. இலங்கை முன்னேற்றம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இலங்கை அணியானது 6வது இடத்திற்கு முன்னேறியது. இதில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 2வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 3வது, 4வது, 5வது இடங்களில் உள்ளன.

  Enewz Tamil டெலிக்ராம்

 சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?? மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்., அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!!!

The post WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. இலங்கை முன்னேற்றம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.