CSK vs RCB: தோனி இடத்தை என்னால நிரப்ப முடியாது. ஆனா... - டாஸில் கேப்டன் ருத்துராஜ் சொன்னது என்ன?

17வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி திடீரென பதவி விலக, ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக்கப்பட்டிருந்தார். பெங்களூருவுக்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் முறையாக சென்னை அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் டாஸூக்கு வந்திருந்தார். டாஸை பெங்களூரு அணியே வென்றிருந்தது. டு ப்ளெஸ்ஸி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
CSK vs RCB

டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸி பேசுகையில், "நான்கு வருடம் கழித்து இந்த மைதானத்திற்கு வருகிறேன். அற்புதமான மைதானம். அற்புதமான ரசிகர்கள். ஆனால், நான் இந்த முறை ஆர்சிபிக்காக ஆடுகிறேன். நல்ல விக்கெட்டாக இருக்கிறது. எப்போதுமே இந்த மைதானம் முதலில் பேட் செய்பவர்களுக்கே சாதகமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார்.

சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் பேசியவை இங்கே, "உண்மையாகவே பெருமையாக இருக்கிறது. தோனியின் இடத்தை நிரப்ப வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் என்னுடைய பாணியில் கேப்டன்சி செய்யப்போகிறேன். அற்புதமான தருணம் இது. கேப்டன் பதவியை ஏற்கிறேன் என்பது எனக்கும் தாமதமாகத்தான் தெரியும். ஆனால், கடந்த ஆண்டே நான் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என தோனி சூசகமாகச் சொல்லிவிட்டார்.
CSK vs RCB

இது ஒரு நல்ல பிட்ச். 40 ஓவர்களுக்கும் பிட்ச் ஒரே மாதிரியாகவே இருக்கும் என நினைக்கிறேன். இந்தப் போட்டியில் சமீர் ரிஸ்வி அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்" என ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருந்தார்.

போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.