IPL 2024: `குஜராத் அணியை கேப்டனாக வழிநடத்த இது ஒரு சிறந்த தருணம்- கில்லை புகழ்ந்த வில்லியம்சன்!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்க இருக்கிறது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய ஹர்திக் பாண்டியா சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.
ஹர்திக் குஜராத் அணியில் இருந்து விலகியதை அடுத்து அந்த அணிக்கு இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சுப்மன் கில் குறித்து குஜராத் அணியில் இடம்பெற்ற நியூசிலாந்து அணியின் புகழ்பெற்ற பேட்டர் கேன் வில்லியம்சன் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், “அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருகின்றன. எங்கள் அணியின் வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் சுப்மன் கில்லுக்கும் ஆதரவாக இருப்பார்கள்.

சுப்மன் கில் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். விளையாட்டைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர். அவர் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்த இது ஒரு சிறந்த தருணம்" என்று கில்லை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
