WPL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த RCB.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அபாரம்!!
இந்தியாவில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி, லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது அதிக புள்ளிகள் பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற RCB அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய RCB அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு இழப்புக்கு 135 ரன்களை குவித்திருந்தது.
ரீஎன்ட்ரி கொடுக்குமா PAYTM பரிவர்த்தனை செயல்பாடு – NPCI அதிரடி உத்தரவு!
இதில், அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் விளைவால், RCB அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post WPL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த RCB.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
