ISL 2024: 1 கோல் வித்தியாசத்தில் கோவா வெற்றி.. பெங்களூர் அணி சொதப்பல்!!
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினர். அதன்படி ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெங்களூர் வீரர் ஷிவால்டோ ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோவா அணியின் ஓடேய் ஒரு கோலை பதிவு செய்தார்.
இனி ரேஷன் கார்டு கட்டாயம்.. இல்லையெனில் ‘இவையெல்லாம்’ கிடைக்காது – அரசின் மாஸ்டர் பிளான்!
இதன் காரணமாக முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 81வது நிமிடத்தில் கோவா அணியின் போரிஸ் சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 36 புள்ளிகளுடன் கோவா அணி 3வது இடத்திலும், 21 புள்ளிகளுடன் பெங்களூர் அணி 8வது இடத்திலும் உள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post ISL 2024: 1 கோல் வித்தியாசத்தில் கோவா வெற்றி.. பெங்களூர் அணி சொதப்பல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
