T20 உலக கோப்பை.2024.. அறிமுகமாகும் ஐசிசியின் புதிய விதி…, வெளியான முக்கிய அப்டேட்!!
T20 உலக கோப்பை 2024 தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்டது. அந்த வெளியான அறிவிப்பில் இத்தொடர் வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 29ஆம் தேதி அரங்கேற உள்ளது. மொத்தமாக 55 T20 போட்டிகளை கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகின்றன.
தமிழக மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படை – மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்வரும் T20 உலகக் கோப்பையின் போது ICC ஸ்டாப் க்ளாக் விதியை நிரந்தரமாக்குகிறது. ஸ்டாப் க்ளாக் விதி பற்றி பார்க்கையில், பீல்டிங் அணிக்கு ஓவர்களுக்கு இடையில் 60 வினாடிகள் இருக்கும், அந்த நேரத்தில் அவர்கள் கவுண்டவுன் பூஜ்ஜியத்தை அடைவதற்குள் அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலக கோப்பை.2024.. அறிமுகமாகும் ஐசிசியின் புதிய விதி…, வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
