ரஞ்சிக் கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42-வது முறையாக மும்பை சாம்பியன்!!

ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கிய இறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு விளையாடிய விதர்பா அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணியில், ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் முஷீர் கான் 10 பவுண்டரிகள் உட்பட (136 ரன்கள்) சதம் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து மும்பை அணி 418 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன் பிறகு களம் இறங்கிய விதர்பா அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை. இதனால் 368 ரன்களுக்கு விதர்பா அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 42-வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வாகைசூடியது.

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

இல்லத்தரசிகளே.., சன் டிவி சீரியல்களில் வந்த அதிரடி மாற்றம்.., இனி இப்படித்தான் ஒளிபரப்பாகும்!!!

The post ரஞ்சிக் கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42-வது முறையாக மும்பை சாம்பியன்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.