`அடுத்த 2 பந்தில் அவர் விக்கெட்டை எடுத்தேன் - சுப்மன் கில்லுடனான வாக்குவாதம் குறித்து ஆண்டர்சன்

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொடரில் பல சம்பவங்கள் பேசுபொருளாகின. அந்தவகையில்  கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் சுப்மன் கில், ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

சுப்மன் கில்

அவை இணையத்தில் வைரலான நிலையில் சுப்மன் கில்லிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  ஆனால் அதற்கு அவர் "அந்த உரையாடல் என்ன என்பது எங்கள் இருவருக்குள் மட்டுமே இருப்பதுதான் சரியென்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சுப்மன்  கில்லுக்கும், தனக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து பேசியிருக்கிறார். அதாவது  “இந்தியாவுக்கு வெளியே ஏதாவது ரன்கள் அடித்து  இருக்கிறீர்களா?” என சுப்மன் கில்லிடம் கேட்டேன்.

சுப்மன் கில், ஜேம்ஸ் ஆண்டர்சன்

அதற்கு “நீங்கள் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது” என அவர் பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை எடுத்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.