WPL 2024: வெற்றி பாதையில் RCB…, நடப்பு சாம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!
மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியானது, RCBயின் எல்லிஸ் பெர்ரி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தட மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
இதனால், மும்பை அணியானது 20 ஓவர் முடிவில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், அதிகபட்சமாக சஜனா 30 ரன்களை எடுத்திருந்தார். இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற எளிய இலக்கை துரத்த RCB அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை சோஃபி மோலினக்ஸ் வந்த வேகத்தில் 9 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தார். ஆனால், அடுத்த வந்த எல்லிஸ் பெர்ரி (40) மற்றும் ரிச்சா கோஷ் (36) பொறுப்புடன் விளையாட, 15 ஓவரிலேயே இலக்கை அடைந்து இந்த WPLலில் 4வது வெற்றியை பெற்றுத்தந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
The post WPL 2024: வெற்றி பாதையில் RCB…, நடப்பு சாம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
