WPL 2024: வெற்றி பாதையில் குஜராத் …, UP வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில்  லாரா வோல்வார்டுடன் (43) இணைந்து பெத் மூனி (74) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.

தமிழக கூட்டுறவுத்துறை ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்., இந்த தேதி முதல்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இதன் விளைவால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.  இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய UP வாரியர்ஸ்  அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவரின் முடிவில்  144 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, WPL  தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்தது.

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

The post WPL 2024: வெற்றி பாதையில் குஜராத் …, UP வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.