IPL 2024 : சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை.. முழு விவரம் உள்ளே!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 1 வருடத்திற்கு பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். இந்நிலையில் மற்ற மைதானங்களில் IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் சென்னையில் மட்டும் டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிக்கெட் விற்பனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என IPL நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மைதான நிர்வாகம் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களே.., பாஸ்  ஆவதற்கான  சிறந்த வழி..,  உடனே விண்ணப்பியுங்கள்!!

The post IPL 2024 : சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.