CSK: ``தோனிக்கு அடுத்து ரோஹித்- அம்பத்தி ராயுடு சொல்லும் யோசனை
2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது.
இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன. இந்த சீசனுடன் தோனி ஓய்வை அறிவித்தால் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி வழக்கம்போல எழத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சி.எஸ்.கே வீரருமான அம்பத்தி ராயுடு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரோஹித் சர்மா சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், " எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் நீண்ட காலம் விளையாடிவிட்டார்.

சிஎஸ்கே அணியில் அவர் இணைந்து அதேபோல வெற்றிகளைக் குவித்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால் அடுத்த கேப்டனாக சிஎஸ்கே அணியை ரோஹித் வழிநடத்தலாம். மேலும் சென்னை அணியை வழிநடத்தும் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது அவரது முடிவு என ராயுடு தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
