கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த டெல்லி …, மீண்டும் தோல்வி பிடியில் சிக்கிய RCB!!
மகளிர் பிரிமியர் லீக் தொடரில், நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக RCB அணி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோட்ரிக்ஸ் 58 ரன்களுக்கும், ஆலிஸ் கேப்ஸி 48 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி RCB அணி களமிறங்கியது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சோஃபி மோலினக்ஸ் 33 ரன்களுக்கும், சோஃபி டெவின் 26 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். ஆனாலும் கடைசி 1 பந்தில் பெங்களூர் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் பெங்களூர் வீராங்கனை ரிச்சா கோஷ் ரன் அவுட் ஆனார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
The post கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த டெல்லி …, மீண்டும் தோல்வி பிடியில் சிக்கிய RCB!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
