இந்திய அணி வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’ - டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தியது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் போட்டிக்கான ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில்,“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வீரர்களின் நிலையான வருவாய்க்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். 2022-23 சீசன் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். போட்டி ஊதியத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.