இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை - சாதனை வெற்றிக்காக பிசிசிஐ சர்ப்ரைஸ்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

ஒரு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் மீதமுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சாதனையை 112 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. முன்னதாக, 1912-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து எதிரான தொடரில் இங்கிலாந்து அணி இதே சாதனையை படைத்திருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.